Skip to main content

Saba message collections

#மாரடைப்பு சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது),* *TALK (பேச சொல்வது),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)* இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்! உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள். இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,* அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம். இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன். மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! #பகிர்வு# உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

" *💞இல்லற இரகசியம்".💞* 

*ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார்.  *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.  

*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.

*‘பறவையே!  உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?*  முயற்சிப்பதில் தவறில்லை.  *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.*   பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது  உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.

*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*.  பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.

‘சீடனே!  *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.  
      
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.

*‘ஐயா!  கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.  இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.

*‘பறவையே!  இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல்.  பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.

பதினைந்து நாட்கள் ஓடிப்போனது.  *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.

*‘ஐயா!  எங்களால் கடலில்  நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது.   நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.    தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.  ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம்.  எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.

சாது யோசித்தார்.  *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.  

*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.  சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.  அது மிதக்கும்.  அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.  களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.

*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.*  இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.

*‘ஐயா!  உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.   குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.

*‘பறவைகளே அருமை!  நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.

*‘ஐயா!  சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம்.  சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.  அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.  பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.*  ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை.  குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*

சாதுவைப் பார்த்தான் சீடன்.   சாது பேசினார்.

*‘சீடனே!  பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.  துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.*  அதற்குக் காரணம் *‘துணை'.*  ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*.   இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது.  *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*  ஆனால், 
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*.   பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது.  *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.*  ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.  

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*.   இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*   
💞இது இல்லற ரகசியம்.💞

🙏💱 *பட்டா & சிட்டா விவரங்கள் இரண்டையும்…. ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி….* 💚❤️

பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா அலுவலகத்தால் பராமரிக்கப்படும்.

இந்த ஆவணத்தில் நிலத்தில் உரிமை, அளவு, பரப்பளவு போன்ற பல முக்கியமான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டாவின் முதன்மை நோக்கம் நிலம் நன்செய் நிலமா? அல்லது புன்செய் நிலமா? எனும் வகையைப் பற்றியது. பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டுமே தமிழக அரசால் வழங்கப்படும். கடந்த 2015 ஆம் வருடத்தில், பட்டா மற்றும் சிட்டாவை தேவையான தகவல்களுடன் ஒரே ஆவணமாக அரசாங்கம் இணைத்தது.

பட்டா மற்றும் சிட்டா ஆகிய இரண்டையும் ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1.முதலில் வருவாய் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://eservices.tn.gov.in/ என்பதை பார்க்கவும்.

2.பின்னர் பட்டா நகலை பார்க்க, நிலஉரிமையை பார்வையிட என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.இதையடுத்து புதிய பக்கத்தில், மாவட்டம் மற்றும் பகுதி வகையை கிராமப்புறமா? நகர்ப்புறமா? என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் “சமர்ப்பி” என்பதைக் ok செய்யவும்.

4.அதில் மாவட்டம், தாலுகா, நகரம், வார்டு, தொகுதி, கணக்கெடுப்பு எண், துணைப்பிரிவு எண் போன்ற கேட்கப்படும் அனைத்து விவரங்களை உள்ளிடவும். பின்னர் அங்கீகார மதிப்பை உள்ளீடு செய்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5.பின்னர் தேவையான எல்லா விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, நிலத்தின் தகவலுடன் ஆன்லைனில் ஒரு சான்றிதழை வழங்கப்படும். அந்த சான்றிதழில் நிலத்தின் வகை, கட்டுமான வகை, கணக்கெடுப்பு எண், இடம், நகராட்சி கதவு எண் போன்ற தகவல்கள் குறிப்பிட்டிருக்கும்.

இதில் பட்டா சிட்டா மட்டுமல்லாது FMB எனப்படும் நில அளவை புலப்படத்தையும் பார்க்க முடியும். மேலும் இவற்றை தேவைப்படுபவர்கள் தங்களது செல்போன் போன்ற சாதனங்களில் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்.


*🚩🚩ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳 பாரத் மாதாகி ஜே🚩🚩*

*FORWARD MESSAGE*
*என்றும் தேசப்பணியில்,*

*"சமூகன்"* *எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*
*அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து-(ABGP)*
*(ALL INDIA CONSUMER PROTECTION MOVEMENT)*
*REGD NO.S-9194/1974 DELHI*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்கள்*
*9842171532*
*9444771532*🌺🌻🌹
*முகநூல்: SMS KING SK*
 *💖💞🙏7🙏💞💖*

*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained""*

_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._

_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._

*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*

*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._ 

" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
 *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._
 
இதுதான் சுயநலமான உலகம்!
*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._

_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._

_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._

_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._

_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_

*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்* 

*True. Knowledge is nowadays very important than money in this world.*

*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*

-படித்ததில் பிடித்தது-

*எது கெடும்*

பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்

கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்

சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்

உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும்  கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்

தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்

இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்

தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்

வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்

துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்



மெதுவாய் படியுங்கள், இதமாய் உணருங்கள்


பழமையான பாடல் ஓன்று...
இன்று 
உலகம் முழுவதும்
தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது
கணியன் பூங்குன்றனார் எழுதிய
யாதும் ஊரே யாவரும் கேளிர்....

இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச் 
சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....
உங்களுக்காக 
*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;* 
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."


இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ 
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...


*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

வாழ்க்கைக் கல்வியைக் கற்று தரும் அருமையான பாடல்.




ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . 
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் 
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

என்றும் என்றென்றும் நட்புடன்... .. 😊👍👍👍🏾🙏🏻🙏🏼

[2/9/2020, 7:51 PM] +91 99400 17206: *மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*

_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் ._

மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . 

*". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*

_அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்.._..

*இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained""*

_கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று ._

_மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்திகளில் சொல்லி விடும்._

*இதைத்தான்,படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்!*

*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*

_கொள்ளை நடந்த போதே,வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது,அவருடைய மேல் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்._ 

" _வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார்_.

""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் "
 *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*

_இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை,இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் ._
 
இதுதான் சுயநலமான உலகம்!
*This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*

_மறுநாள் செய்திகளில்,வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது .அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி.அவர் பங்கு 50 கோடி._

_கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து,பணத்தை எண்ணத் தொடங்கினர் ._

_எவ்வளவு எண்ணியும் ,அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை ._

_கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து ," நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்._

_ஆனால் இந்ந வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_

*இதற்குத் தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்* 

*True. Knowledge is nowadays very important than money in this world.*

*இந்தியா இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது!பாவம் மக்கள்!*

-படித்ததில் பிடித்தது-
[19/11/2020, 4:21 PM] +91 99401 87317: யாரையும் திருத்த முயலாமிருப்பது நல்லது

ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு

ஒரு முனிவரும் மாநிலஅமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.

இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. 

அமைச்சரால் தூங்கவே
முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.

மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது.

நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய அமைச்சர், 

''என்ன மனிதர் நீங்கள்... 
இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: 

''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; 
கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது.
அவைகள் பத்திரிகை படிப்பதில்லை.
அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்...???'' என்றார் அமைச்சர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
அப்படிப் போராடாதீர்கள்.
பிரச்னை குரைப்பொலி 
அல்ல, உங்கள் எதிர்ப்பு 
உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான். நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....??? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் முனிவர்.

'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி.

ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து முனிவரைச் சந்தித்தார் அமைச்சர்...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

முனிவர் நமக்குச் சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்; அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்.. உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது..
அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

யாரையும்  நாம் திருத்த முயலாமல் அவர்களோடு வாழ்வதற்கு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அருமை.
You can just try.peace will come.


நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
 குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை 
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
 எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 
FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

 #சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய 
#7_முக்கிய_செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 
**********************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட்      – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி           – 144 சதுர அடி
1 சென்ட்      – 3 குழி
3 மா              – 1 ஏக்க‍ர்
3 குழி           – 435.6 சதுர அடி
1 மா              – 100 குழி
1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி     = ஒரு மா
20 மா        = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

•   10 கோண் = 1 நுண்ணணு

•   10 நுண்ணணு = 1 அணு

•      8 அணு = 1 கதிர்த்துகள்

•    8 கதிர்த்துகள் = 1 துசும்பு

•    8 துசும்பு = 1 மயிர்நுனி

•    8 மயிர்நுனி = 1 நுண்மணல்

•      8 நுண்மணல் = 1 சிறு கடுகு

•             8 சிறு கடுகு = 1 எள்

•             8 எள் = 1 நெல்

•             8 நெல் = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம்

•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

 .  4 காதம் = 1 யோசனை

•             வழியளவை

•        8 தோரை(நெல்) = 1 விரல்

•             12 விரல் = 1 சாண்

•             2 சாண் = 1 முழம்

•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

•       2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்

•      4 குரோசம் = 1 யோசனை

•  71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை 

100 ச.மீ                              - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 

1 ச.மீ                                  - 10 .764 ச அடி

2400 ச.அடி                       - 1 மனை 

24 மனை                         - 1 காணி

1 காணி                            - 1 .32 ஏக்கர் 

144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 

435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 

1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 

100 சென்ட்                     - 1  ஏக்கர் 

1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 

2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)

100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 

1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர்                             = 43560 சதுர அடி


*பங்குச் சந்தை கதை* 

ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். 🐒

ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் ! 🐵

ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.🙊

அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.🙄

யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.🤔

இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்கள புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம். 😬

இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம். 😬

கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தரதா சொன்னானாம். 😉

அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனே குரங்கு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 🐒

பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி😯

ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு ! ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம்.  🙊

வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க.😉

ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி. 😉

தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகள எல்லாம் பாத்து பராமறிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி. 😉

பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை. 😞

அத பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம். 😉

காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க. 😬

அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு. 🐵🤑

ஒரு குரங்க 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகள வாங்குனாங்களாம். 🙊

குரங்குகள எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம். 🤑

யாருமே வரல ! 😳 எல்லாரும் அந்த வியாபாரியோடு வேலைக்காரன பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க. 🙄

ஆனா அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிட்டான் !  😉

அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்னுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகள 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விக்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க. 😭

இந்த வியாபாரத்துக்கு பேருதான் ‘ *பங்குச் சந்தை* ’

 இந்த குரங்கு வியாபாரத்தில சொற்ப ஆட்கள் தான் பணக்காரங்க ஆக முடியும். பெரும்பாலான ஆட்களுக்கு குடிதான் மூழ்கிப்போகும். 🐒😉😅


Please forward to seniors and good to know and hope it helps when required.
WHAT TO DO IF SUDDENLY YOU ARE UNABLE TO PASS URINE ...
 Forwarded..
Recently I met a famous allopathy doctor on account of a medical article. He is in his 70's and an ENT specialist. It was astonishing to listen to one of his experiences which he shared. 
That morning one day he had a problem on waking up. He had an urge to pass urine but for some reason he was unable to do so. At an advanced age some people face such a problem some times and if they try two or three times they may succeed. He tried repeatedly but nothing happened. His continuous efforts didn’t bear any result. Then he realised there is a problem. Although he is a doctor he is no exception to such physical problems as he is also made of flesh and blood like everyone else. Now his lower abdomen became heavy and he was unable to sit or stand and was suffering from the pressure buildup. Immediately he called up a known urologist on the phone and explained his situation. The Urologist replied “I am at present in a hospital in the outskirts and I will be at a clinic in your area in one and a half hours.. Will you be able to withstand it for that long?” He replied “I will try”. 
At that instant he received an incoming call from another allopathy doctor, a childhood friend. With great difficulty the old doctor explained the situation to his friend.  
His friend replied “Oh, your bladder is full and you are unable to pass urine. Don’t worry, do as I suggest and you will be able to overcome it”. 
And he gave the instruction: “Stand up and jump vigorously … while jumping lift both your hands as though you are plucking mangoes from a tree.. Do that 15 to 20 times”. 
What? 
With a full bladder he wants me to jump? 
Though a little sceptical the old doctor tried it. What a relief to him when within 5 to 6 jumps urine started passing. He felt overjoyed and thankful to his childhood friend for solving the issue with such a simple method which otherwise would have required an admission to a hospital where they would have inserted a catheter inside the bladder, injections, anti-biotics etc etc etc resulting in a bill over thousands of Dollars in addition to physical and mental stress for him and his near and dear ones.
 
Sharing this for the benefit of others.
 
KINDLY SHARE WITH AS MANY 
FRIENDS AND ALL WHO MAY NEED THIS VERY IMPORTANT REMEDY FOR WHAT COULD BE AN UNBEARABLE EXPERIENCE.
 
 
__,_._,___


🌹💙🙏🌹🙏

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அனுபவ அறிவுரை)

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.....

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். 

அதையும் பெரிது பண்ணாதே......

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.....

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி ஜென்மங்கள்.
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்.....

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். 

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. 

அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள்.....
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். 

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது...... இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.....

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்....

அது,
உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், 
நண்பர்களாக இருந்தாலும், 
கணவன், மனைவியாக இருந்தாலும், 
பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், 
பேரன் பேத்திகளாக இருந்தாலும், 
எந்த உறவுகளாக இருந்தாலும், 
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது......
.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.....

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.....

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு........

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும்,
தான் யார்? தன் குணம் என்ன?
என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்....

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது..... 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.......

யோகி ராம்சுரத்குமார்




Comments

Popular posts from this blog

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 இந்த அற்புதமான தமிழ் பாடலை யாவரும் அறிந்து இருக்க வேண்டும். மெதுவாய் படியுங்கள், இதமாய் உணருங்கள் பழமையான பாடல் ஓன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... உங்களுக்காக *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;* *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெரியோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் பாடலின் வரிகளும், பொருளும்: *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர...