இந்த அற்புதமான தமிழ் பாடலை யாவரும் அறிந்து இருக்க வேண்டும். மெதுவாய் படியுங்கள், இதமாய் உணருங்கள் பழமையான பாடல் ஓன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... உங்களுக்காக *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;* *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெரியோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் பாடலின் வரிகளும், பொருளும்: *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர...