Skip to main content

Posts

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 இந்த அற்புதமான தமிழ் பாடலை யாவரும் அறிந்து இருக்க வேண்டும். மெதுவாய் படியுங்கள், இதமாய் உணருங்கள் பழமையான பாடல் ஓன்று... இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது. அது கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... உங்களுக்காக *"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;* *தீதும் நன்றும் பிறர்தர வாரா;* *நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....* *சாதலும் புதுவது அன்றே;...* *வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;* *மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது* *கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று* *நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்* *முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...* *ஆதலின் மாட்சியின்* *பெரியோரை வியத்தலும் இலமே;* *சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.* – கணியன் பூங்குன்றனார் பாடலின் வரிகளும், பொருளும்: *"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...." எல்லா ஊரும் எனது ஊர்.... எல்லா மக்களும் எனக்கு உறவினர
Recent posts

Saba message collections

#மாரடைப்பு சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. *மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு* S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!* மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது, *SMILE (சிரிக்க சொல்வது),* *TALK (பேச சொல்வது),* *RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)* இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்